மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
நடிகர் ரஜினிகாந்த் (வயது 74) திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று (செப்.,30) அனுமதிக்கப்பட்டுள்ளார். திடீர் வயிற்றுவலி காரணமாக, சிகிச்சைக்கு அனுமதி என கூறப்படுகிறது.
ரஜினிகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாகவும், மருத்துவ சிகிச்சைகள் முடிந்த பின்னர் விரைவில் வீடு திரும்புவார் என அவரது மனைவி லதா தெரிவித்துள்ளார். இதுவரை, ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் இருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வரவில்லை. அதேநேரத்தில், அவருக்கு எந்த அறுவை சிகிச்சையும் செய்யப்படவில்லை என்றும், தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், ரஜினிக்கு அடிவயிற்றுக்கு அருகே ரத்த நாளம் பெரிதாகி இருப்பதால் அதற்குரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவ சிகிச்சை முடிந்து 3, 4 நாட்களில் அவர் வீடு திரும்புவார் என்கின்றனர்.