ரஜினி 173வது படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா கமல்? | பராசக்தி படத்தின் டப்பிங் பணியில் ரவி மோகன் | மீண்டும் சிறப்பு பாடலுக்கு நடனமாடிய ஸ்ரேயா சரண் | தேரே இஸ்க் மெயின் படத்தில் பிரபுதேவா? | ரிவால்வர் ரீட்டா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | கதை படத்தின் வெற்றியை முடிவு செய்கிறது : பிரியா பவானி சங்கர் | மகா காலேஸ்வரர் கோயிலில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் வழிபாடு | பிளாஷ்பேக்: “மந்திரிகுமாரி”யால் திரைப்பட வடிவம் பெறாமல் போன “கவியின் கனவு” மேடை நாடகம் | 'பீட்சா' படத்தில் நடித்தேன்: கவின் சொன்ன பிளாஷ்பேக் | அப்பா படத்தில் பங்கேற்க மகள்கள் ஆர்வம் |

தென்னிந்திய சினிமாவின் முக்கியமான ஆளுமை எஸ்.பி.பாலசுப்ரமணியம். 50 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடி உள்ளார். 4 ஆண்டுகளுக்கு முன்பு அவர் காலமானார். சென்னையில் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வாழ்ந்த நுங்கம்பாக்கம் காம்தார் தெருவிற்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று எஸ்பிபியின் மகனும், பாடகருமான எஸ்.பி.பி.சரண் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்தார். அவரது கோரிக்கையை ஏற்று சென்னை, நுங்கம்பாக்கம் காம்தார் முதல் தெருவிற்கு 'எஸ்.பி.பாலசுப்பிரமணியம்' சாலை என பெயர் சூட்டப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதற்கு எஸ்பிபி சரண் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ‛‛எனது கோரிக்கையை ஏற்று 36 மணிநேரத்தில் அப்பாவின் நினைவு நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசிற்கும், குறிப்பாக முதல்வர் ஸ்டாலினுக்கும், இதற்கு துணை நின்ற அமைச்சர்கள் உதயநிதி, சுவாமின்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அரசு நிர்வாகத்தினருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக மிக்க மிக்க நன்றி'' என தெரிவித்துள்ளார்.




