ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. 2009ல் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை திருமணம் செய்தார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 15 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த இவர்கள் இப்போது பிரிந்து விட்டனர். இதுதொடர்பாக நேற்று(செப்., 9) ஜெயம் ரவி வெளியிட்ட அறிக்கையில், ‛‛நீண்டகால யோசனை, பல பரிசீலனைக்கு பின் ஆர்த்தியை பிரியலாம் என்ற கடினமான முடிவை எடுத்துள்ளேன். இது எளிதாக எடுக்கப்பட்டதல்ல, என்னை சாந்தவர்களின் நலனை கருதி எடுக்கப்பட்டது. இது எனது சொந்த முடிவு என்பதால் எனது தனிப்பட்ட விஷயமாகவே இருக்க வேண்டும் என வேண்டுகிறேன். அனைவரின் ஆதரவுக்கு நன்றி'' என தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் இன்று(செப்., 10) விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் ஜெயம் ரவி மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கடந்த 2009ல் ஆர்த்தியை திருமணம் செய்ததை ரத்து செய்யக் கோரியும், விவாகரத்து கோரியும் தமது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கானது அக்., 10ல் விசாரணைக்கு வருகிறது.
நடிகர் ஜெயம் ரவி இன்று(செப்., 10) தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். பிறந்தநாளில் இப்படியொரு கடினமான முடிவை எடுத்த ஜெயம் ரவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததை விட தைரியமாக இருங்கள் என ரசிகர்கள் பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.