சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
'வாரிசு' கதாநாயகியான ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் தனுஷ் ஜோடியாக 'குபேரா' படத்திலும், தெலுங்கில் 'புஷ்பா' படத்திலும், ஹிந்தியில் 'சிக்கந்தர், சாவா' படத்திலும் நடித்து வருகிறார். கடந்த ஓரிரு வாரங்களாக அவர் சமூக வலைத்தளங்களின் பக்கம் வரவில்லை. அவர் சிறிய விபத்தில் சிக்கி ஓய்வில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
“நான் இந்தப் பக்கம் வந்து சிறிது நாட்களாகிவிட்டது. எனக்கு சிறிய விபத்து ஏற்பட்டு, மருத்துவர்கள் சொன்னபடி வீட்டில் ஓய்வில் இருந்தேன். நான் இப்போது நன்றாக இருக்கிறேன். இனி நான் சுறுசுறுப்பாக செயல்படுவேன். உங்களை கவனித்துக் கொள்வதில் எப்போதும் முன்னுரிமை கொடுங்கள். வாழ்க்கை மிகவும் குறுகியது, உடையக் கூடியது. நமக்கு நாளை கிடைக்குமா என்பது தெரியாது. எனவே ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருங்கள்,” என்று தத்துவமாகவும் பதிவிட்டுள்ளார்.
அதோடு, “குறிப்பு' என்று சொல்லி, “நான் இப்போது லட்டுக்களை அதிகமாக சாப்பிடுகிறேன்,” என்று பதிவிட்டுள்ளார்.
ஒரு லட்டு, லட்டுக்களை சாப்பிடுகிறதே…..கமா, ஆச்சரியக்குறி…என 'க்ரிஞ்ச்' ஆக யாரும் கமெண்ட் செய்யவில்லை என்பது ஆறுதல்.