அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து சில தினங்களுக்கு முன்பு வெளியான படம் 'தி கோட்'. இப்படத்தின் முதல் நாள் வசூல் 126 கோடி என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அடுத்த இரண்டு நாட்களுக்கான வசூல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. இருந்தாலும் 200 கோடியை நிச்சயம் கடந்திருக்கும் என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்துடன் சேர்த்தால் விஜய்யின் 8வது 200 கோடி படம் இது என்ற பெருமையைப் பெறுகிறது.
இதற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளிவந்த, “மெர்சல், சர்க்கார், பிகில், மாஸ்டர், பீஸ்ட், லியோ,” ஆகிய படங்கள் 200 கோடிக்கும் அதிகமான வசூலைக் கடந்தன. தமிழ் சினிமாவில் அதிக வசூலைக் கொடுத்தவர் என்ற பெயரைப் பெற்றிருந்த ரஜினிகாந்த் கூட இத்தனை 200 கோடி படங்களைக் கொடுத்ததில்லை. தற்போது பான் இந்தியா நடிகராக உயர்ந்துள்ள பிரபாஸ் கூட அதற்கும் குறைவான 200 கோடி படங்களையே கொடுத்திருக்கிறார்.
அது மட்டுமல்ல முதல் நாள் வசூலில் 100 கோடி வசூலைத் தந்த தமிழ் நடிகர்களில் விஜய் இரண்டு 100 கோடி படங்களைக் கொடுத்துள்ளார். ஒன்று லியோ, மற்றொன்று 'தி கோட்'. தமிழகம், வெளிநாடுகளில் தற்போது 'தி கோட்' படம் எதிர்பார்த்த வசூலைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது என்று தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் மட்டும் 100 கோடி வசூலை இன்று கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.