மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் இன்று (செப்.,8) காலை 10 மணி அளவில் ஆரம்பமானது. இதில் சென்னை மற்றும் பல ஊர்களிலிருந்து நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் 2025 பிப்ரவரியுடன் முடிவடைய உள்ள நிலையில், அதனை மேலும் 3 ஆண்டுகள் நீட்டிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் பொருளாளர் கார்த்தி பேசுகையில், ‛‛நடிகர் சங்கம் கட்டடம் கட்டுவது நின்ற நிலையில், விலைவாசி உயர்வு காரணமாக நிதிச்சுமை அதிகரித்துள்ளது. நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க கலைநிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கலை நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினி, கமல் ஆகியோர் சேர்ந்து பங்கேற்பதாக உறுதியளித்தனர். நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக ஒரு கோடி ரூபாய் அளித்துள்ளார்'' என்றார்.
கேரள திரையுலகை உலுக்கிவரும் ஹேமா கமிட்டியின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த அறிக்கை தமிழ் திரையுலகிலும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் சூழலில், ‛பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து ஊடகங்களில் பேசவேண்டாம்' என விசாகா கமிட்டி தலைவர் நடிகை ரோகிணி வலியுறுத்தினார்.