லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
1997ம் ஆண்டில் விஜய் நடிப்பில் வசந்த் இயக்கிய ‛நேருக்கு நேர்' என்ற படத்தில் அறிமுகமானார் சூர்யா. அப்படத்தில் அவருக்கு ஜோடியாக சிம்ரன் நடித்திருந்தார். மணிரத்னம் தயாரித்த இந்த படம் திரைக்கு வந்து நேற்றோடு 27 ஆண்டுகள் ஆனதை அடுத்து சூர்யாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் அவரது 44வது படத்தின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், பெரிய அளவில் மீசை, கூலிங் கிளாஸ் அணிந்த அட்டகாசமான ஒரு கெட்டப்பில் பைக்கில் வந்து கொண்டிருக்கிறார் சூர்யா. மேலும், இந்த படத்தில் சூர்யாவுடன் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்க, சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனங்கள் இப்படத்தை தயாரித்து வருகின்றன.