'இட்லி கடை' தள்ளிப் போக இதுதான் காரணமா ? | பிருத்விராஜிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் | எம்புரான் தயாரிப்பாளர் கோகுலம் நிறுவனத்தில் ரூ.1.5 கோடி பறிமுதல் | மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி |
தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் இயக்குநர் அட்லீயிடம் உதவியாளராகப் பணியாற்றியவர் சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயன் நடித்த 'டான்' படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். இந்தப் படம் 100 கோடிக்கு வசூல் செய்தது.
இந்நிலையில் இயக்குநர் சிபி சக்ரவர்த்திக்கும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் ஈரோடு ஆர்.என்.புதூரில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
நடிகர்கள் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே.சூர்யா, இயக்குநர் அட்லீ, தர்ஷன், இயக்குநர்கள் ரவிக்குமார், பாக்யராஜ் கண்ணன், பாடலாசிரியர் விவேக், தயாரிப்பாளர் சுதன், லைகா புரொடக்ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன், எஸ்கே புரொடக்ஷன்ஸ் கலை, தயாரிப்பாளர் சாந்தி டாக்கீஸ் அருண், முனீஷ்காந்த், பிக்பாஸ் ராஜு, இயக்குநர் விக்னேஷ் ராஜா, இயக்குனர் விஷால் வெங்கட், பால சரவணன், காளி வெங்கட், மிர்ச்சி விஜய், சிவாங்கி உட்பட பலர் திருமணத்தில் கலந்து கொண்டனர்.