ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் வேட்டையன். அவருடன் அமிதாப்பச்சன், பஹத் பாஸில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்திருக்கிறார் . ரஜினி போலீஸ் படத்தில் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களில் நடைபெற்று வந்தது. தற்போது இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் இப்படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று முதல் ரஜினி தனக்கான வேட்டையன் டப்பிங்கை பேச தொடங்கி இருக்கிறார். இது குறித்த ஒரு வீடியோவை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு காட்சியை டப்பிங் பேசிய முடித்துவிட்டு, டைரக்டர் சார் சூப்பர் சார் என அந்த காட்சியை வியப்புடன் சொல்லி இயக்குனரை ரஜினி பாராட்டுவது போன்று இடம்பெற்றுள்ளது. அதோடு குறி வெச்சா இற விழனும் என ரஜினி பேசும் வசனமும் அந்த வீடியோவில் இடம் பெற்று இருக்கிறது.