வைஷ்ணவியை கரம் பிடித்தார் வெற்றி வசந்த் | நெப்போட்டிசம் பற்றி கிர்த்தி சனோன் பளீச் | ஹாலிவுட் படத்தில் அறிமுகமாகும் ஜிவி பிரகாஷ், யோகிபாபு | சிவகார்த்திகேயனை கவுரவித்த ராணுவ பயிற்சி மையம்! | சூர்யா 44வது படத்தின் டைட்டில் 'கல்ட்' | உதயநிதிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அஜித்குமார் | வைரலாகும் சித்தார்த் - அதிதி ராவ் திருமண புகைப்படங்கள் | மகிழ்திருமேனி இயக்கத்தில் விக்ரம்? | ஜெயிலர் 2 : ரஜினி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் | ‛96' படத்தின் இரண்டாம் பாகம் உருவாவது உறுதி |
கடந்த சில வருடங்களாகவே மலையாள திரை உலகில் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்றால் அட்ஜஸ்ட் செய்துகொண்டு செல்ல வேண்டும் என நடிகைகள் நிர்பந்திக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்த நிலையில் சமீபத்தில் வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை அதை உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் மலையாள திரையுலகில் மட்டுமே இதுபோன்று நடப்பதாக பூதாகரமாக காட்ட வேண்டாம், அனைத்து திரையுலகங்களிலும் இதுபோல நடக்கிறது, நம் தமிழ் திரையுலகிலும் இது இருக்கிறது என்று கூறியுள்ளார் சீனியர் நடிகையான ஊர்வசி.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், “எல்லா திரையுலகிலும் இதுபோன்று சில ஆண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் காணுவது கடினம். அப்படி அவர்களிடம் வாய்ப்புக்காக செல்லும்போது யாரும் தனி அறையில் சந்திப்பு நிகழ்த்த வேண்டாம். பொது இடத்தில் சந்தியுங்கள். அல்லது உடன் யாரையாவது அழைத்துச் செல்லுங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள். மலையாளத்தில் மட்டுமல்ல தமிழ் சினிமாவிலும் இது போன்ற சங்கடங்கள் இருக்கின்றன.
நடிகைகள் தாங்கள் நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட இயக்குனர்கள், நடிகர்களை அனுசரித்து செல்லவில்லை என்றால் படப்பிடிப்பில் வேறு விதமாக பழிவாங்கப்படுகிறார்கள். அப்படி தான் ஒரு தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்த போது அந்த படத்தின் ஹீரோ என் மீதான கோபத்தை காட்டுவதற்காக இயக்குனருடன் கைகோர்த்துக்கொண்டு யாரும் அறியாதது போல ஒரு சம்பவம் செய்தார். ஒரு காட்சியில் நான் உயரமான இடத்தில் அதாவது மேலே ஒரு வரப்பில் நான் நடந்து செல்வது போன்று காட்சி கீழே இருந்து படமாக்கப்பட்டது. அந்த கட்சியில் என் முகம் கூட அவ்வளவாக தெரிய வராது. ஆனால் இயக்குனர் கேமராவை ஓட விடச் சொல்லாமலேயே பலமுறை என்னை அந்த காட்சியில் மீண்டும் மீண்டும் நடிக்கச் சொன்னார்.
காரணம் கேட்டதற்கு நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டும் என பதில் கூறினார். ஆனால் கேமராவின் பின்னால் அப்போது அமர்ந்திருந்த என் தாய் தொடர்ந்து கேமரா ஓடாமலேயே என்னை நடிக்க சொல்வதை கண்டு அதிர்ச்சியாகி யாரும் அறியாமல் என்னை அழைத்து உண்மையை கூறி அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பிரபல மனிதர் உதவியுடன் படப்பிடிப்பிலிருந்து வெளியேறி ஊருக்கு கிளம்பிச் சென்றோம். அதன் பிறகு அந்த படத்தில் நடிக்கவில்லை. அந்த இயக்குனரும் இறந்துவிட்டார் என்பதால் தற்போது அவர்கள் யார் என்பது பற்றி சொல்வது நன்றாக இருக்காது” என்று கூறியுள்ளார்.