'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் | ஜெயிலரின் வில்லனாக நடிக்க இருந்தது மம்முட்டி தான் ; ரகசியம் உடைத்த வசந்த் ரவி |
மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதியின் வாழ்க்கை புத்தகத்தை அமைச்சர் ஏ.வ.வேலு எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ரஜினி முதல் நூலை பெற்றுக் கொண்டார்.
பழைய மாணவர்கள்
பின்னர் அவர் பேசும்போது “முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுபவம் வாய்ந்த பழைய மாணவர்களையும் (மூத்த திமுக அமைச்சர்கள்) சமாளித்து ஆட்சி நடத்துகிறார். புதியவர்களை சமாளிப்பது எளிது. கருணாநிதின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய துரைமுருகன் போன்றவர்களை சமாளிப்பது கடினம்” என ஜாலியாக பேசினார்.
பல்லுபோன நடிகர்கள்
ஆனால் இதனை அமைச்சர் துரை முருகன் சீரியசாக எடுத்துக் கொண்டதாக தெரிகிறது. நேற்று வேலூரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதுகுறித்து கூறும்போது “மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால் தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது” என்று கூறியுள்ளார். இது ரஜினி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்த அதற்கு வலைதளங்களில் கண்டனங்களை பதிவிட்டு வந்தனர்.
எங்கள் நட்பு தொடரும் - ரஜினி
இந்நிலையில் விஜயவாடா செல்ல சென்னை விமான நிலையம் வந்தார் ரஜினி. அப்போது துரை முருகன் கருத்து பற்றி செய்தியாளர்கள் கேட்க அதற்கு அவர், ‛‛துரை முருகன் எனது நீண்டகால நண்பர், அவர் என்ன சொன்னார் என எனக்கு தெரியாது. அவரை எனக்கு பிடிக்கும், எங்களது நட்பு எப்போதும் போல் தொடரும். அதோடு விஜய்யின் கட்சி கொடி அறிமுகத்திற்கு, ‛விஜய்க்கு எனது வாழ்த்துகள்' '' என தெரிவித்தார்.
நகைச்சுவையே தவிர பகையல்ல
துரை முருகன் எனது நண்பர் என ரஜினி கூறிய கருத்திற்கு பதிலளித்த அமைச்சர் துரை முருகன், ‛‛ரஜினி கூறியது போல் நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள். இந்த நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக்க வேண்டாம்'' என்றார்.
கடந்த இரு தினங்களாக ரஜினி, துரை முருகன் பேச்சை வைத்து வலைதளங்களிலும் சண்டைகள் நடந்து வந்தன. இப்போது இவர்கள் இருவருமே பரஸ்பர நண்பர்கள் என கூறிவிட்டதால் இந்த பிரச்னை இதோடு முடிவுக்கு வரும் என தெரிகிறது.