அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
வேட்டையன் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் ‛கூலி' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜை பொறுத்தவரை படத்திற்கு படம் புதுப்புது காம்பினேஷன்களில் நட்சத்திர பட்டாளங்களை தன்னுடன் இணைத்துக் கொள்வார். அந்த வகையில் இந்த படத்தில் கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு பிறகு ரஜினியுடன் சத்யராஜ் இணைந்து நடிக்கிறார். அதுமட்டுமல்ல நடிகை ஷோபனாவும் நீண்ட நாட்களுக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த படத்திற்காக ரஜினிகாந்த் உடன் இணைந்துள்ளார்.
இந்த நிலையில் தற்போது கன்னட நடிகர் உபேந்திராவும் கூலி படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக இணைந்துள்ளார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் ரஜினிகாந்த் உடன் தான் இணைந்து நடிக்கும் விஷயத்தை ஆர்வம் மிகுதியால் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு தெரியப்படுத்தியுள்ளார் நடிகர் உபேந்திரா.
அதே சமயம் இந்த பதிவை சில நிமிடங்களிலேயே அவர் நீக்கியும் விட்டார். ஆனாலும் அவரது இந்த பதிவு வைரலாக பரவி வருகிறது. கன்னடத்தில் பிரபல இயக்குனர், நடிகர் என பவனி வரும் உபேந்திரா கடந்த 2008ல் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு 16 வருடங்கள் கழித்து மீண்டும் கூலி படத்தில் நடிப்பதன் மூலம் தமிழில் நுழைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.