மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
லூனர் மோசன் பிக்சர்ஸ் மற்றும் ஆர் புரொடக்ஷன் இணைந்து தயாரித்துள்ள படம் 'ஆக்குவாய் காப்பாய்'. கனடா நாட்டில் வாழும் தமிழர்களால் பலமுறை மேடை நாடகமாக அரங்கேற்றப்பட்ட 'அரங்காடல்' என்கிற நாடகத்தை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. சகாப்தன் என்கிற நாடக ஆசிரியர் எழுதிய இந்த மேடை நாடகத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்து முழுநீள படமாக தயாரித்து உள்ளனர். திரைகதை அமைத்து இயக்கி இருப்பவர் மதிவாசன்.
முக்கிய கதாபாத்திரத்தில் கிருந்துஜா நடித்துள்ளார் மற்றும் ஜெயாப்பிரகாஷ் டேனிஷ் ராஜ், செந்தில் மகாலிங்கம், மதிவாசன் சீனிவாசகம், சுரபி ஆகியோர் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் கனடா நாட்டின் தமிழ் திரையுலகை சேர்ந்தவர்கள். ஆர்.ரிஜி இசை அமைத்துள்ளார், ஜீவன் ராமஜெயம், தீபன் ராஜலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
கனடாவில் விபத்தில் சிக்கி கோமா நிலையில் உள்ள தனது கணவனை 6 வருட காலம் போற்றி பாதுகாத்து வருவதோடு பல வாழ்க்கை போராட்டங்கள் நடுவே 6 வயது பெண் குழந்தையும் வளர்ந்து படிக்க வைத்து வருகிறார் நாயகி கிருந்துஜா. இப்படி வாழ்க்கை போராட்டத்தால் சிரமப்படும் பெண்ணை உற்றார் உறவினர், சமுதாயம் பார்க்கும் தப்பான கண்ணோட்டம் இவற்றை எல்லாம் எப்படி கடந்து போனாள்? என்பதுதான் படத்தின் கதை. எந்த தேசத்தில் வாழ்ந்தாலும் பெண்களின் நிலை ஒன்றுதான் என்பது படம் சொல்லும் செய்தி.