அண்ணாமலைக்கு பிடித்த ‛இட்லி கடை' | 'மகுடம்' படத்தை இயக்கும் விஷால்: வைரலாகும் புகைப்படங்கள் | 'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் |
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரிலீஸ்க்கு தயாராகி வரும் திரைப்படம் ' தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்'. சுருக்கமாக தி கோட் என அழைக்கின்றனர். இதில் விஜய்யுடன் இணைந்து பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், மோகன், சினேகா, லைலா, அஜ்மல், மீனாட்சி சவுத்ரி, வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. செப்., 5ல் படம் ரிலீஸாக உள்ள நிலையில் தணிக்கை படம் சென்றது. தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் அளித்ததாக படக்குழு புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.