தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | எந்த விதி மீறலும் இல்லை : தனுஷ் நோட்டீஸிற்கு நயன்தாரா பதில் | மீனாட்சி சவுத்ரி எடுத்த முடிவு | குடும்பமே இணைந்து தயாரிக்கும் 'பேமிலி படம்' | 'விடாமுயற்சி' டீசர்: அஜித் ரசிகர்களை மகிழ வைத்த மகிழ் திருமேனி | விஜய் ஆண்டனி குடும்பத்தில் இருந்து வரும் வாரிசு நடிகர் | மத உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கேரள தியேட்டர்களில் இருந்து தூக்கப்பட்ட துல்கர் நண்பரின் படம் | யோகி பாபு நடிக்கும் ‛பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே' |
மலையாள சினிமா மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் பாலியல் தொல்லை உள்ளது. என்னிடம் அட்ஜெஸ்ட்மென்ட் கேட்டவருக்கு செருப்பாலேயே அடிப்பேன் என்றேன் என நடிகை சனம் ஷெட்டி தெரிவித்துள்ளார்.
அம்புலி, மாயை உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சனம் ஷெட்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். அவ்வப்போது படங்களில் நடிப்பவர், போட்டோஷூட் மூலம் ரசிகர்களை் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். சமீபத்தில் கோல்கட்டாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நடிகை சனம் ஷெட்டியும் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தார். மேலும் இதை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் ஒன்றையும் நடத்த உள்ளார். இதற்கு அனுமதி பெற சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சனம் ஷெட்டி, ‛‛இந்த மாதிரி பாலியல் வன்கொடுமை தினம் தினம் நடந்து கொண்டே இருக்கிறது. பெண்களுக்கு எங்கேயும் பாதுகாப்பு இல்லை. குடும்பத்தில் கூட பாதுகாப்பு அற்ற சூழல் தான் உள்ளது. கோல்கட்டா சம்பவத்திற்கு தமிழகத்தில் ஏன் ஆர்ப்பாட்டம் என கேட்பவர்களுக்கு கிருஷ்ணகிரியில் 13 மாணவிகளுக்கு பாலியல் சீண்டல் நடந்துள்ளது.
கேரள சினிமாவில் பாலியல் சீண்டல் இருப்பதாக ஹேமா கமிஷன் அறிக்கை அளித்துள்ளது. அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். அட்ஜெஸ்ட்மென்ட் என்பது கேரள சினிமாவில் மட்டுமல்ல, தமிழ் சினிமாவிலும் நடக்கிறது. இங்கு இல்லை என யாரும் சொல்ல முடியாது. என்னிடம் இதுபோன்று கேட்டவர்களிடம் செருப்பால அடிப்பேன் நாயே என திட்டியிருக்கிறேன். அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றால் அதை வேண்டாம் என சொல்லியிருக்கிறேன். அதற்காக சினிமாவில் எல்லோரும் அப்படியா என்றால் நிச்சயம் இல்லை. நான் வேலை பார்த்த படங்களில் எனக்கு அப்படி நடந்தது இல்லை. இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் நடக்கிறது. அட்ஜெஸ்ட்மென்ட் யாரும் பேசினால் அதை காரி துப்பிட்டு போங்க. உங்க திறமை மேல் நம்பிக்கை வைங்க. நிச்சயம் வாய்ப்பு வரும், காத்திருங்கள். பிரச்னைகள் இருக்கு, நமது உரிமைக்காக நாம் தான் போராட வேண்டும்'' என்றார்.