'மகாபாரதம்' தொடரில் கர்ணனாக நடித்த நடிகர் பங்கஜ் தீர் காலமானார் | மாதவனுடன் மோதும் நிமிஷா | கெனிஷாவின் இசை ஆல்பத்திற்காக பாடலாசிரியர் ஆனார் ரவி மோகன் | பிளாஷ்பேக் : பரப்பன அக்ரஹார சிறையில் தமிழ் படம் | பிளாஷ்பேக் : 'ராஷோமோன்' பாதிப்பில் உருவான 'அந்த நாள்' | கார் ரேஸில் தொடர்ந்து பயணிக்க அஜித் முடிவு | காமெடி நடிகை ஆர்த்தி தந்தை காலமானார் | நீ தனியாக ஜெயித்து காட்டு: மகனை தனித்துவிட்ட விக்ரம் | தீபாவளி புக்கிங் ஆரம்பம்: மழையால் மிரளும் திரையுலகம் | மக்கள் திட்டாதது நம்பிக்கையை கொடுத்தது: ஹரிஷ் கல்யாண் |
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் சென்னையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் பல்வேறு திடுக்கிடும் சம்பவங்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன. முக்கிய குற்றவாளிகள் பலரும் கைதாகி வருகின்றனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் சினிமா இயக்குனர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலையில் தொடர்புடைய ரவுடி சாம்போ செந்திலின் கூட்டாளியான மொட்டை கிருஷ்ணனுக்கு போனில் மோனிஷா பேசியதாகவும், அவருக்கு அடைக்கலம் தந்ததாகவும் கூறி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மொட்டை கிருஷ்ணன் வக்கீல் என்பதால் தங்கள் வழக்கு தொடர்பாக மட்டுமே அவரிடம் பேசியதாக மோனிஷா தெரிவித்துள்ளாராம். மேலும் இவ்விவகாரம் தொடர்பாக இயக்குனர் நெல்சனிடம் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.