குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
2023ம் வருடத்திற்கான கேரள அரசு திரைப்பட விருதுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டன. இதில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஆடுஜீவிதம் திரைப்படம் சிறந்த சிறப்பு திரைப்படமாகவும், சிறந்த நடிகராக பிரித்விராஜ், சிறந்த இயக்குனராக பிளஸ்சி என மூன்று விருதுகளை வென்றுள்ளது.
இந்த படத்திற்காக தங்களை பல வருடங்களாக அர்ப்பணித்துக் கொண்ட இயக்குனர் பிளஸ்சி மற்றும் பிரித்விராஜ் இருவருமே இந்த விருதுக்கு தகுதியானவர்கள் தான் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். ஆனால் 2024ல் வெளியான இந்த படம் எப்படி 2023ம் வருடத்திற்கான விருது பட்டியலில் இடம் பெற்றது என தற்போது சிலர் புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
சமீபத்தில் இது குறித்து விளக்கம் அளித்த இயக்குனர் பிளஸ்சி கூறும்போது, “விவரம் தெரியாதவர்கள் தான் இதுபோன்று பேசுவார்கள். படம் இந்த வருடம் தான் வெளியானது என்றாலும் மார்ச் மாதத்திலேயே வெளியாகிவிட்டது. விருதுக்கான படங்கள் கடந்த வருடம் ஏப்ரல் முதல் இந்த வருடம் மார்ச் வரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவது வழக்கம். எனக்கு இந்த சர்ச்சை குறித்து கவலை இல்லை. அதேசமயம் இந்த படத்தின் உயிர்நாடியாக விளங்கிய ஏ.ஆர் ரஹ்மானின் இசை கேரள விருது குழுவினரால் எப்படி கவனிக்கப்படாமல், அங்கீகாரம் பெறாமல் போனது என்பது குறித்து தான் வருத்தமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.