நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் | 'அவதார் ' பார்க்க 10 லட்சம் இந்தியர்கள் ஆர்வம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் வெள்ளி விழா கொண்டாடிய படம் | பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! |

பாலா இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்து வரும் படம் 'வணங்கான்'. இதனை பாலாவின் பீ ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் வி அவுஸ் புரொடக்ஷன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதில் ரோசினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தற்போது இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார்; ஆனால், ஜி.வி. பிரகாஷ் மற்ற படங்களில் பிஸியானதால் வணங்கான் படத்திற்கு பின்னணி இசையமைக்க முடியவில்லை என கூறப்பட்டது. இதனால் பின்னணி இசையமைக்க சாம்.சி.எஸ் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்ரம் வேதா, கைதி, பார்கிங் போன்ற படங்களில் சாம். சி. எஸ் பின்னனி இசை பெரிதளவில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.




