லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியில் பிரபலமாகி விட்டார் நடிகை ராஷ்மிகா. தற்போது தெலுங்கில் புஷ்பா 2, தமிழில் குபேரா, ஹிந்தியில் ஜாவா, சிக்கந்தர் போன்ற படங்களில் நடிக்த்து வருகிறார். இவர் கூறுகையில், ‛‛சினிமாவிற்கு ஏற்ற முகம் இல்லை என கூறி ஆரம்பத்தில் பலரும் என்னை நிராகரித்தார்கள். ஆடிஷன் போய்விட்டு வீட்டிற்கு வந்தாலே கண்ணீருடன் தான் வருவேன். கிட்டத்தட்ட 25 படங்கள் வரை நிராகரிக்கப்பட்டிருக்கிறேன். இருந்தாலும் தொடர்ந்து முயற்சித்தேன். கஷ்டப்பட்டு ஒரு படத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. மூன்று மாதங்கள் பயிற்சி நடந்தது. பின்னர் அந்த படமும் நின்றுவிட்டது. பிறகு சரியான வாய்ப்புகளை பயன்படுத்தி இந்த நிலைக்கு வந்துள்ளேன். ஒவ்வொரு படத்திலும் சிறப்பாக நடிக்க வேண்டும் என்பதே எனது ஆசை'' என்கிறார்.