டாஸ்மாக் முறைகேடு வழக்கு: தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயனுக்கு சம்மன்? | அட்லிக்கு டாக்டர் பட்டம்: சத்யபாமா பல்கலைக்கழகம் வழங்குகிறது | பிளாஷ்பேக்: விநியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தை ஈடுகட்டிய என்.எஸ்.கிருஷ்ணன் | பிளாஷ்பேக்: விஜய் படத்தை நிராகரித்த அஜித் | ஹாட்ரிக் வெற்றி : மகிழ்ச்சியில் சிம்ரன் | ஜெயிலர் 2வில் யோகிபாபு | என்னை கொல்ல சதி நடக்குது: ஜாக்குவார் தங்கம் அலறல் | இடியாப்ப சிக்கலில் விஜயகாந்த் மகன் திரைப்படம் | நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! |
பிரபல டிவி நடிகை சித்ரா. பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ்பெற்றார். கடந்த 2020, டிச., 9ல் சென்னை, பூந்தமல்லியை அடுத்துள்ள ஒரு தனியார் ஓட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது மகள் சாவில் மர்மம் இருப்பதாக சித்ராவின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் சித்ராவின் கணவர் ஹேமந்த் உள்ளிட்ட சிலரை கைது செய்தனர். சித்ராவின் தற்கொலைக்கு இவர் காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டது. தொடர்ந்து சிறையில் இருந்து வந்த ஹேமந்த், மார்ச் மாதம் ஜாமினில் விடுதலை ஆனார்.
இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஹேமந்த்தை குற்றவாளி என நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லாததால் அவரை நிரபராதி என அறிவித்து இந்த வழக்கில் இருந்து அவரை விடுவிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.