தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' |

கடந்த 2020ம் ஆண்டில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா உடன் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் ' மூக்குத்தி அம்மன்'. இப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பு கிடைத்தது. ஆர்.ஜே.பாலாஜி அடுத்து நடிகை த்ரிஷாவை வைத்து 'மாசாணி அம்மன்' எனும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வந்தது. இது மூக்குத்தி அம்மன் 2ம் பாகமாக உருவாகும் என கூறப்பட்டது. ஆனால் திடீரென வேல்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் மூக்குத்தி அம்மன் 2ம் பாகத்தில் நயன்தாரா நடிக்கிறார் என அறிவித்தனர். ஆனால், இந்த பாகத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கவில்லை. இவருக்கு பதிலாக சுந்தர்.சி இப்படத்தை இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகியுள்ளது.