இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழில் அந்தக் காலத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'தேவதாஸ்' பட நடிகரான நாகேஸ்வர ராவ் பேரன், 'ரட்சகன், தோழா' ஆகிய படங்களில் நடித்த நடிகர் நாகார்ஜூனாவின் மகன், 'கஸ்டடி' படத்தில் நடித்தவர் நாக சைதன்யா. இவருக்கும் சென்னையைச் சேர்ந்தவரும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த சமந்தாவும் சில வருடங்கள் காதலித்து பின் 2017ல் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால், நான்கு வருடங்களிலேயே அவர்கள் பிரிந்துவிட்டார்கள்.
நாக சைதன்யாவுக்கும், 'பொன்னியின் செல்வன்' படத்தில் வானதி கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த சோபிதா துலிபலாவுக்கும் இடையே சில வருடங்களாகக் காதல் என பேசப்பட்டது. இருவரும் வெளிநாடுகளில் சுற்றி வந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. ஆனால், இருவருமே அவர்களது காதலைப் பற்றி வெளிப்படையாகச் சொல்லவேயில்லை.
இந்நிலையில் நாக சைதன்யா, சோபிதா ஆகிய இருவருக்கும் ஐதராபாத்தில் நாகார்ஜூனாவின் இல்லத்தில் இன்று(ஆக., 8) திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அடுத்த சில மாதங்களில் அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள்.
நாக சைதன்யா, சோபிதா நிச்சய போட்டோவை பகிர்ந்து நாகார்ஜூனா வெளியிட்ட பதிவில், ‛‛எங்கள் மகன் நாக சைதன்யாவுக்கும், சோபிதா துலிபலாவுக்கும் இன்று காலை 9:42 மணிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். துலிபலாவை எங்கள் குடும்பத்திற்கு வரவேற்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். மகிழ்ச்சியான ஜோடிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் வாழ்நாள் முழுவதும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்க வாழ்த்துகிறேன். கடவுள் ஆசீர்வதிப்பாராக!"
8.8.8
எல்லையற்ற அன்பின் ஆரம்பம்
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.