லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
வெங்கட் பிரபு இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், கங்கை அமரன் எழுதிய 'தி கோட்' படத்தின் பாடலான 'ஸ்பார்க்', சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அப்பாடலுக்கு கலவையான விமர்சனங்கள் வந்தன. விஜய் ரசிகர்கள் உட்பட பலர் பாடலைப் பற்றி கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். ஆனாலும், பல யுவன் ரசிகர்கள் பாடல் நன்றாகத்தான் இருக்கிறது, சில 'ஹேட்டர்ஸ்' வேண்டுமென்றே பாடலைப் பற்றி தவறாக விமர்சித்து வருவதாக சொல்லி வந்தார்கள்.
தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதத்தில் 'ஸ்பார்க்' பாடலை வைத்து 'ரீல்ஸ்' வீடியோ ஒன்றைப் போட்டுள்ளார் யுவன். அதன் மூலம் தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவே ஹேட்டர்ஸ்களுக்குப் புரிய வைத்துள்ளார். “டேக் ஓகே, இதை போஸ்ட் பண்ணு என வெங்கட்பிரபு சொன்னார்,” என்றும் அந்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் இப்பாடல் பற்றிய அனைத்து விமர்சனங்களையும் வெங்கட் பிரபுவும், யுவனும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றே தெரிகிறது. பாடல் சூப்பர் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை அவர்களிடம் உள்ளது.