சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
இசை அமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இந்த ஆண்டு பாலிவுட்டில் இசை அமைப்பாளராக காலடி எடுத்து வைத்தார். இதற்கு முன் 'அக்லி' என்ற படத்தின் பாடல்களுக்கு மட்டும் இசை அமைத்திருந்தார். தமிழில் வெளியான 'சூரரைப்போற்று' படம் 'சர்பிரா' என்ற பெயரில் ஹிந்தியில் ரீமேக ஆனபோது அதன் இசை அமைப்பாளா ஆனார். அக்ஷய்குமார் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கிய இந்த படம் அக்ஷய்குமாரின் தோல்வி படங்களின் பட்டியலில் இணைந்தது.
இந்நிலையில் அக்ஷய் குமார் ஹீரோவாக நடிக்கும் மற்றொரு படமான 'ஸ்கை போர்ஸ்' படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்துக்கு கீரவாணி முதலில் இசை அமைப்பதாக இருந்தது. தயாரிப்பாளர் தினேஷ் விஜயனுக்கும் அவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் படத்தில் இருந்து கீரவாணி விலகினார். இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் அந்தப் படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார். 'ஸ்கை போர்ஸ்' படத்தில் அக்ஷய் குமாருடன் சுனில் ஷெட்டி, நிம்ரத் கவுர், சாரா அலிகான் உட்பட பலர் நடித்து வருகிறார்கள்.