நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

துணிவு படத்தின் வெற்றியை தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சி என்ற படத்தில் நடித்து வருகிறார். மகிழ்திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா கசான்ட்ரா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு, ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் எதிர்மறையான விமர்சனங்கள் பெற்ற நிலையில், அடுத்தடுத்து 2 போஸ்டர்களை படக்குழு வெளியிட்டது.
மேலும் மீண்டும் இளமையான கெட்டப்பில் அஜித், திரிஷாவுடன் இருப்பதை போன்று மூன்றாவது போஸ்டரை வெளியிட்டு அஜித் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில் விடாமுயற்சி படத்தின் அடுத்த போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நடிகர் அர்ஜுன் ஒரு நெடுஞ்சாலையில் இருப்பது போன்றும், அஜித்தின் உருவம் பின்னால் இருப்பது போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
விடாமுயற்சி படத்தின் படபிடிப்பு அஜர்பைஜானில் முடிவடைந்ததாக ஏற்கனவே படக்குழு அறிவித்த நிலையில், படத்தை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.