இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
பாரதி கண்ணம்மா, பொற்காலம், ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியவர் சேரன். நடிகராகவும் பல படங்களில் நடித்து அசத்தி உள்ளார். கடைசியாக திருமணம் என்ற படத்தை இயக்கினார். விரைவில் ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறார். அதேசமயம் நடிகராகவும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது முதன்முறையாக மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார்.
இதுபற்றி சேரன் வெளியிட்ட பதிவில், ‛‛நண்பர்களே... முதன்முதலாக நீண்டநாள் ஆசையாக இருந்த ஒன்று நிறைவேறி இருக்கிறது. மலையாள திரைப்படம் ஒன்றில் ஆகச்சிறந்த நடிகரான டொவினோ தாமஸ் உடன் இணைந்து 'இஸ்க்' படத்தின் இயக்குனரான அனுராஜ் மனோகர் இயக்கத்தில் நடிக்கிறேன். என்றும் போல உங்கள் ஆதரவும் அன்பும் தேவை.. நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.