இரண்டு வாரமாக தாக்குப் பிடிக்கும் 'கூலி' | ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் தீபாவளிக்கு ரிலீஸ் | சிம்பு படத்துக்கு தயாரிப்பாளர் மாற்றமா? | லடாக்கில் சிக்கித் தவிக்கும் மாதவன் | 'கூலி'க்கு 'யுஏ' சான்று கேட்ட வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : விஜயகாந்த் பட தலைப்புக்கு அனுமதி மறுத்த தணிக்கை குழு | பிளாஷ்பேக் : சிவாஜி, பத்மினியை சேர்த்து வைத்த பணம் | என் குழந்தைகளுக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் அப்பா : ஜாய் கிரிசில்டா பரபரப்பு புகார் | 50 ஆண்டு சாதனை, ரஜினிக்கு பாராட்டு விழா : விஷால் பேட்டி | 'எல்ஐகே' அல்லது 'டியூட்' : ஏதாவது ஒன்றுதான் தீபாவளி ரிலீஸ் |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் 2 படம் சமீபத்தில் திரைக்கு வந்ததது. அடுத்தபடியாக ராம் சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கி உள்ள கேம் சேஞ்சர் படம் திரைக்கு வரப்போகிறது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தில் ராம் சரணுடன் கியாரா அத்வானி, ஜெயராம், சுனில், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இந்நிலையில், கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளரான தில் ராஜூ அப்படத்தின் ரிலீஸ் குறித்த ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், இந்த 2024ம் ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கேம் சேஞ்சர் திரைக்கு வருவதாக அறிவித்திருக்கிறார்.