போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

அரசியலில் மட்டும்தான் கூட்டணி என்பதில்லை, சினிமாவிலும் கூட்டணி என்பது மிக முக்கியம். இயக்குனர், இசையமைப்பாளர், நாயகன் ஆகியோரது கூட்டணி என்பது டாப் நடிகர்களுக்கு முக்கியமான ஒரு கூட்டணி. அப்படியான கூட்டணியில் பல சாதனைப் படங்கள், முக்கிய படங்கள் வெளிவந்துள்ளன.
1996ம் ஆண்டில் டாப் நடிகராக இருந்த கமல்ஹாசன், அப்போது வளர்ந்து வந்த இயக்குனர் ஷங்கர் உடன் இணைந்து 'இந்தியன்' படத்தைக் கொடுத்தார். கூடவே தன் இசையால் இளைஞர்களை வசீகரித்த ஏஆர் ரஹ்மான் வேறு. கதை, திரைக்கதை, காட்சிகள், காதல், காமெடி, பாடல்கள், வர்மக்கலை என என்னென்னமோ செய்து ரசிகர்களை வசீகரித்தார்கள். தமிழ் சினிமாவின் முக்கிய கமர்ஷியல் படங்களில் அதுவும் ஒன்று.
28 ஆண்டுகளுக்குப் பிறகு கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணி மீண்டும் இணைந்து கடந்த வாரம் வந்த 'இந்தியன் 2' படம் முதல் பாகத்தின் வரவேற்பையும், வெற்றியையும் நெருங்கவில்லை என்பது ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை. பெரிதும் எதிர்பார்த்த ரசிகர்களுக்கு வருத்தமே மிஞ்சியது, பலரும் அதிர்ச்சியைத் தந்தது.
இருந்தாலும் 38 வருடங்களுக்குப் பிறகு அடுத்தாண்டு வெளியாக உள்ள கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் வர உள்ள 'தக் லைப்' நோக்கி ரசிகர்களின் பார்வை சென்றுள்ளது. இந்தக் கூட்டணியாவது தங்களுக்கு மலர்ச்சியைத் தரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான சிவ ஆனந்த் சமீபத்திய பேட்டி ஒன்றில், “படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்து வருகிறது. படத்தில் நிறைய விஷயங்களை செய்திருக்கிறோம். வெற்றிக்குத் தேவையான அது தியேட்டர்களில் பிரகாசிக்கும்,” என்று சொல்லியிருக்கிறார்.