மாரீசன் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | ஊட்டி பூங்காக்களில் சினிமா படப்பிடிப்புக்கு தடை | ஓடிடியில் ஜொலிக்குமா யோகி பாபுவின் 'லெக் பீஸ்' | இளம் பெண் பலாத்காரம்: பாலிவுட் இயக்குனர் கைது | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் கடவுளாக நடித்த சிவாஜி, ரஜினி, கமல் | அதிரடி காட்டும் விமலின் ஓம் காலி ஜெய் காளி | பிளாஷ்பேக்: எம்ஜிஆர் நடிக்க, கருணாநிதி வசனம் எழுதிய புராண படம் | வீர தீர சூரன் 5 நாள் வசூல் முழு விவரம் | சர்ச்சைகளுக்கிடையில் 200 கோடி வசூல் கடந்த 'எல் 2 எம்புரான்' | பிளாஷ்பேக்: “படித்த பெண்” திரைப்படப் பாடலும், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் |
விஷால் நடித்த ஆம்பள என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. அதையடுத்து இன்று நேற்று நாளை, தனி ஒருவன், அரண்மனை 2 போன்ற படங்களுக்கு இசையமைத்தவர் மீசைய முறுக்கு என்ற படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்தார். பின்னர், நட்பே துணை, நான் சிரித்தால், பிடி சார் என பல படங்களில் ஹீரோவாக நடித்தார் ஆதி. தற்போது கடைசி உலகப் போர் என்ற படத்தில் நடிப்பதோடு இயக்கவும் செய்கிறார். மேலும் டி. ராஜேந்தர் பாணியில் பாடல்கள் எழுதுவது தவிர, கதை, திரைக்கதை, வசனம் , எழுதி இயக்குவதோடு தயாரிக்கிறார். இந்த படத்தின் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜூன் ராஜா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பிரதீப் ராகவ் எடிட்டிங் செய்ய, மகேஷ் மேத்யூ ஸ்டன்ட் அமைக்கிறார். இப்படத்தில் நடிக்கும் ஹீரோயின் உட்பட மற்ற நடிகர் நடிகையர் குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இன்று வெளியாவதாகவும் ஹிப்ஹாப் ஆதி அறிவித்திருக்கிறார்.