ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் |
நடிகர் ரியோ ராஜ் சின்னத்திரையின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி, பின்னர் ‛பிளான் பண்ணி பண்ணணும், நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா' ஆகிய படங்களில் நடித்தார். அப்படங்கள் பெரிதளவில் வெற்றியடையவில்லை. கடைசியாக ரியோ ராஜ் நடித்து வெளிவந்த 'ஜோ' திரைப்படம் நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றி பெற்றது. இதனால் ரியோ ராஜ் அடுத்து நடிக்கும் படங்கள் மீது எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தற்போது யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் ரியோ ராஜ் கதாநாயகனாக புதிய படத்தில் நடிக்கின்றார். இதனை அறிமுக இயக்குனர் ஷூவ்நித் என்பவர் இயக்குகிறார். மேலும், இதில் ‛சுழல்' வெப் தொடரில் நடித்த கோபிகா ரமேஷ் கதாநாயகியாக நடிக்கிறார். கடந்த 45 நாட்கள் தொடர் படப்பிடிப்பு நடத்தி இப்போது முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.