காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

ஆர்.ஜே.பாலாஜியும், அவரது நண்பர் சரவணனும் இணைந்து இயக்கிய படம் 'மூக்குத்தி அம்மன்'. 4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த இந்த படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். நயன்தாரா மூக்குத்தி அம்மனாக நடித்திருந்தார். அவருடன் ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி, ஸ்மிருதி வெங்கட், அஜய் கோஷ் உள்பட பலர் நடித்திருந்தார். படம் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த சில ஆண்டுகளாகவே ஆர்ஜே பாலாஜி கூறி வந்தார். ஆனால் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிக்க மறுப்பதாகவும், அதிக சம்பளம் கேட்பதாகவும், அதனால் திரிஷாவை நடிக்க வைக்க முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்த நிலையில் 'மூக்குத்தி அம்மன் இரண்டாம் பாகம்' அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் நயன்தாரா மீண்டும் மூக்குத்தி அம்மனாக நடிப்பதும் உறுதியாகி உள்ளது. இந்த படத்தை ஜசரி கணேசுடன் இணைந்து நயன்தாராவும் தயாரிக்கிறார். இதில் மூக்குத்தி அம்மன், அவரது பக்தை என இரு வேடங்களில் நயன்தாரா நடிப்பதாக தெரிகிறது. மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றி அறிவிக்கப்படவில்லை.