ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் | டாக்குமெண்டரியாக தயாராகும் ரகுவரன் வாழ்க்கை | தமிழுக்கு வரும் 'கொண்டல்' பிரதிபா | 'அன்னை இல்லத்தில் உரிமை இல்லை' : பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய ராம்குமாருக்கு கோர்ட் உத்தரவு | டிரைலருக்கு 'குட்' வரவேற்பு; படத்திற்கும் அப்படியே கிடைக்குமா? |
சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா, அபர்ணா பாலமுரளி மற்றும் பலர் நடிப்பில் 2020ம் ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியான படம் 'சூரரைப் போற்று'. ஏர் டெக்கான் என்ற விமான சேவையை ஆரம்பித்து ஏழை மக்களையும் விமானத்தில் ஏறிப் பறக்க வைத்தவர் அதன் நிறுவனர் கோபிநாத். அவரது பயோபிக் படமாக வந்தது 'சூரரைப் போற்று'. ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. சூர்யாவிற்கும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், அபர்ணா பாலமுரளிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றுத் தந்தது. சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒரிஜனல் திரைக்கதை ஆகிய விருதுகளையும் வென்றது.
இப்படத்தை ஹிந்தியில் அக்ஷய்குமார், ராதிகா மதன் மற்றும் பலர் நடிக்க ரீமேக் செய்துள்ளார்கள். நாளை ஜூலை 12ம் தேதி இந்தப் படம் வெளியாக உள்ளது. தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வந்த அக்ஷய் குமாருக்கு இந்தப் படம் மீண்டும் பழைய வெற்றியைப் பெற்றுத் தருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக படமாகி வந்த படம். இந்தப் படத்தை அக்ஷயும் பெரிதும் நம்பியுள்ளார்.
ஆனால், நாளை படம் வெளியாக உள்ள நிலையில் முன்பதிவு மிகவும் மோசமாக உள்ளது. படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று அதன்பின் வாய்மொழியாக படம் பற்றிய நல்ல தகவல் பரவினால் படத்தைப் பார்க்க ரசிகர்கள் வருவார்கள் என நம்புகிறார்கள்.
ஓடிடியில் வெளியானதால் இந்தப் படத்தை தமிழிலேயே பல ஹிந்தி ரசிகர்கள் பார்த்துவிட்டார்கள். அவர்கள் மீண்டும் படம் பார்க்க வருவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாலிவுட்டில் ரீமேக் படங்களுக்கான எதிர்காலம் என்ன என்பது இந்தப் படத்தின் வரவேற்பில்தான் உள்ளது.