இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி | இறுதிக்கட்டத்தில் 'கேர்ள் பிரண்ட்' : முதல் பாடல் வெளியீடு | புதுமுகங்களின் 'தி கிளப்' | பிளாஷ் பேக்: தயாரிப்பாளர் ஆன எஸ்.எஸ்.சந்திரன் | பிளாஷ்பேக்: மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் | விக்ரம், பிரேம்குமார் கூட்டணி உருவானது எப்படி | ரஜினி, கமல் இணைவார்களா? : காலம் கனியுமா? | காளிதாஸ் 2 வில் போலீசாக நடித்த பவானிஸ்ரீ |
கன்னட நடிகர் தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடாவை சமூக வலைத்தளங்களில் தொந்தரவு செய்த ரசிகர் ரேணுகாசாமி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.
தர்ஷன், அவரது காதலி பவித்ர கவுடா அந்த வழக்குடன் சேர்த்து கைது செய்யப்பட்டுள்ளவர்கள் விசாரணைக் கைதிகளாக சிறையில் உள்ளனர். பெங்களுரூவில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் தர்ஷன்.
அங்கு அவருக்கு அளிக்கப்படும் உணவுகள் தனக்கு செரிமானப் பிரச்சனையை ஏற்படுத்துவதாகவும், அதனால் வீட்டு சாப்பாட்டை அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் தினமும் அசைவ உணவு சாப்பிடும் பழக்கம் கொண்ட தர்ஷனுக்கு சிறையில் விதிகளின்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் மட்டுமே அசைவ உணவு வழங்கப்படுகிறது.
அவரது கோரிக்கையை உயர்நீதிமன்றம் விரைவில் விசாரிக்கும் எனத் தெரிகிறது.