லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சின்னத்திரையிலோ வெள்ளித்திரையிலோ ஒரு பெண் பிரபலமாகிவிட்டால் அவரை லவ் டார்ச்சர் செய்தே கொன்று விடுகின்றனர் சில ரசிகர்கள். அந்த வகையில் அண்மையில் நிறைவுபெற்ற சூப்பர் சிங்கர் சீசன் 10 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமாகியுள்ளார் ஜீவிதா. இறுதிப்போட்டியில் இரண்டாவது இடத்தை பிடித்து வெற்றி பெற்ற ஜீவிதாவை ஊடகங்கள் பேட்டி எடுத்து வருகின்றன.
அப்போது ஒரு பேட்டியில் பேசியுள்ள அவர், இன்ஸ்டாவில் பல லவ் புரொபோஸ்கள் வருவதாகவும், அதில் ஒருவர் 'வீட்டு அட்ரஸ் கொடுங்க வந்து பொண்ணு கேக்குறோம்' என்று மெசேஜ் அனுப்பியுள்ளதாகவும் கூறினார். அதேசமயம் அவருடன் பேட்டி அளித்துள்ள ஜான் ஜெரோம், தனக்கு லவ் புரொபோஸ் எதுவும் வரவில்லை. எல்லோரும் அண்ணா, தம்பி என்று பேசுவதாக கூறியுள்ளார்.