சபரிமலை தங்க தகடு திருட்டு வழக்கில் ஜெயராமிடம் விசாரிக்க முடிவு | பிளாஷ்பேக்: பாண்டியராஜன் ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை | பொங்கல் போட்டியில் 2 படங்கள் மட்டுமா? | தாஷமக்கான் தலைப்புக்கு என்ன அர்த்தம் | பிளாஷ்பேக்: வரதட்சணை கொடுமைக்கு எதிரான முதல் படம் | ‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் |

நடிகர் ரகுமான் மலையாள திரையுலகில் அறிமுகமானாலும் தமிழில் பாலச்சந்தர் இயக்கிய ‛புது புது அர்த்தங்கள்' படம் மூலம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றவர். தொடர்ந்து படங்களில் கதாநாயகனாக நடித்து வந்த அவர், சமீப காலமாக ‛துருவங்கள் பதினாறு, பொன்னியின் செல்வன்' உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர மற்றும் வில்லன் நடிகராகவும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார். இவரது மூத்த மகள் ருஸ்தாவின் திருமணம் கடந்த 2021ல் நடைபெற்றது.
இவரது இளைய மகள் அலிஷா சிறுவயதில் இருந்தே சினிமாவில் ஆர்வம் கொண்டவராக இருந்தார். ஒரு நடிகையாக ஆக வேண்டும் என்பதுதான் இவரது எண்ணமாக இருந்தாலும் சினிமாவை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கில் இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக சேர்ந்து தற்போது கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைப் படத்தில் பணியாற்றி வருகிறார்.
இந்த படத்தில் உதவி இயக்குனராக தொடர்ந்து பணியாற்றி வருவதால் நடிகையாக வேண்டும் என்கிற எண்ணமே தற்போது ஞாபகத்தில் வருவதில்லை என்று கூறியுள்ள அலிஷா, நடிகையாக மட்டுமல்ல எதிர்காலத்தில் ஒரு இயக்குனராக எனது பயணம் தொடங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.




