நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் சில படங்களில் நடித்திருந்தாலும் அந்தப் படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் மலையாள நடிகை நித்யா மேனன். 'ஓ காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம்” ஆகிய படங்களில் அவருடைய நடிப்பு ரசிகர்களின் மனதில் நிலையானதொரு இடத்தைப் பிடித்தவை.
தற்போது விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க, பாண்டிராஜ் இயக்க உள்ள படத்தில் நித்யாவைக் கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம். கிராமம், திருவிழா, கூட்டுக்குடும்பம் என நகரும் ஒரு கதையில் நித்யா நடித்தால் பொருத்தமாக இருக்கும் என அவரிடம் பேசி வருகிறார்கள்.
இயல்பான நடிகர் எனப் பெயரெடுத்த விஜய் சேதுபதி, இயல்பான நடிகை எனப் பெயரெடுத்த நித்யா மேனன் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தால் சிறப்பாக இருக்கும் என முயன்று வருகிறார்கள். நித்யா ஓகே சொல்லிவிட்டால் படத்தின் அறிவிப்பு விரைவில் வந்துவிடும்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து மலையாளத்தில் 19(1)(a) என்ற படத்தில் நடித்துள்ளனர்.