ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் இருக்கும் லாஸ் ஏஞ்சல்ஸில், லாஸ் ஏஞ்சல்ஸ் இந்திய திரைப்பட விழா கடந்த 27ம் தேதி தொடங்கியது. இதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவில் இறுதிநாளான நாளை விஜய் சேதுபதி நடித்த அவரது 50வது படமான 'மஹாராஜா' திரையிடப்படுகிறது. இதில் விஜய் சேதுபதியுடன் மம்தாமோகன் தாஸ், நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், நித்திலன் சாமிநாதன் இயக்கி இருந்தார். இதேபோல சமீபத்தில் மலையாளத்தில் கிறிஸ்டோடாமி இயக்கத்தில் வெளியான 'உள்ளொழுக்கு' என்ற படமும் திரையிடப்படுகிறது. இதில் பார்வதி திருவோத்து, ஊர்வசி ஆகியோர் நடித்திருந்தார்கள். லாஸ் ஏஞ்சல்ஸில் திரையிடப்படுகிறது. இவ்விழாவில் பார்வதி கலந்து கொள்கிறார்.