மோகன் ராஜா இயக்கத்தில் சிம்பு? | பிரேம் குமார் இயக்கத்தில் விக்ரம்? | ஷாருக்கானை வைத்து அலைபாயுதே திட்டம்! - மணிரத்னம் | தெலுங்குத் திரையுலகினர் மீது பவன் கல்யாண் கோபம் | கலாம் கதையை படமாக்குவது சவால்: இயக்குனர் ஓம் ராவத் | அரசியல் சீன், டயலாக் உருவாக்கி கொடுத்த நடிகர் | ரோஜாஸ்ரீயின் அழகு ரகசியம் | ‛‛கமல் ஒரு ஏணி; அவரை மதித்து மேலே செல்வேன், மிதித்து அல்ல'': சிம்பு | 'கேம் சேஞ்ஜர்' அனுபவம் ஒரு 'பயங்கரம்' - விலகிய எடிட்டர் பேச்சு | பிளாஷ்பேக்: மலைக்க வைக்கும் 50வது ஆண்டில் “மயங்குகிறாள் ஒரு மாது” |
நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ் மற்றும் பலர் நடித்த 'மகாராஜா' படம் ஜுன் 14ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியானது.
உலக அளவில் சுமார் 60 கோடி வசூலை நெருங்கியுள்ள இப்படம் வெற்றிகரமான படமாக அமைந்து லாபத்தைக் கொடுத்துள்ளது. தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் இப்படம் லாபகரமான படமாக அமைந்துள்ளது.
அங்கு சுமார் 9 கோடிக்கு இந்தப் படம் வசூலாகியுள்ளது. சுமார் 3 கோடிக்கு அங்கு வியாபாரம் நடந்துள்ளது. செலவுகள் போக 1 கோடி வரையில் லாபத்தைக் கொடுத்துள்ளதாக டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'கல்கி 2898 ஏடி' படம் வெளியாகும் வரை அங்கு இந்தப் படம் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் லாபத் தொகை இன்னும் அதிகமாகலாம்.