விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரவுடிதான் என்ற படத்தில் நடித்த போது நயன்தாராவுக்கும் அவருக்குமிடையே காதல் ஏற்பட்டது. அதையடுத்து சுமார் பத்து ஆண்டுகள் வரை காதலித்து வந்த அவர்கள் கடந்த 2022ம் ஆண்டு ஜூன் மாதம் ஒன்பதாம் தேதி திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரண்டு மகன்களை பெற்றெடுத்தார்கள்.
மகன்களுடன் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும் தற்போது வெளிநாடுகளில் சுற்று பயணம் செய்து வருகிறார்கள். நேற்று, விக்னேஷ் சிவன் -நயன்தாராவின் இரண்டாவது திருமண நாள் என்பதால் அதை வெளிநாட்டில் அவர்கள் விமரிசையாக கொண்டாடியுள்ளார்கள். அதோடு பொதுவெளியில் ஜாலியாக சுற்றித் திரிந்தபோது, நயன்தாராவை அலேக்காக தூக்கியுள்ளார் விக்னேஷ் சிவன். அது குறித்த வீடியோ ஒன்றையும் அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.