15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் |
ஒரு நடன கலைஞராக இருந்து பின் நடன இயக்குனராக மாறி அதன் பின் நடிகராக தன்னை உயர்த்தி கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். தற்போது தமிழில் முன்னணி நட்சத்திரமாக பல படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இவரைப் போலவே நடன திறமை கொண்ட இவரது தம்பி எல்வினும் நடிப்பில் ஆர்வம் கொண்டு அண்ணன் வழியை பின்பற்றி 'புல்லட்' என்கிற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இந்த படத்தை இன்னாசி பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் ராகவா லாரன்ஸும் நடித்துள்ளார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் சமீபத்தில் இந்த படத்தை ராகவா லாரன்ஸ் பார்த்தார். படம் சிறப்பாக வந்திருப்பதை கண்டு மகிழ்ச்சியடைந்த லாரன்ஸ் தனது தம்பியின் நடிப்பை பாராட்டி அவருக்கு ஒரு விலை உயர்ந்த கார் ஒன்றையும் பரிசளித்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள லாரன்ஸ், “உங்கள் அனைவரிடமும் இந்த சிறப்பு தருணத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.