வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' |

நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்து வந்த வேட்டையன் படப்பிடிப்பை சமீபத்தில் நிறைவு செய்தார். இதனை தொடர்ந்து சில நாட்கள் சுற்றுப்பயணமாக அபுதாபி சென்று இருந்த அவர் அங்கே தனக்கு வழங்கப்பட்ட சிறப்பு கவுரவமான கோல்டன் விசாவை பெற்றுக் கொண்டார். மீண்டும் சென்னை விரும்பிய அவர் தற்போது உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் புனித தலங்களை தரிசிப்பதற்காக வழக்கம் போல ஒரு ஆன்மிகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை உத்தரகண்ட் போலீசார் வரவேற்று தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்த புகைப்படத்தை தங்களது அதிகாரப்பூர்வ சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ள உத்தரகண்ட் போலீஸார், “இந்த தேவ பூமியான பத்ரிநாத்தை தரிசிக்க இங்கே வந்திருக்கும் பிரபல இந்திய நடிகர் ரஜினிகாந்தை வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த தரிசனத்தை முடித்த பிறகு அவர் (ரஜினிகாந்த்) தரிசனம் சிறப்பாக இருந்தது என்றும் மக்களின் நலனுக்காகவும் நாட்டிற்காகவும் தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்ததாகவும் கூறியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளனர்.