மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
'கேங்ஸ் ஆப் கோதாவரி' என்ற படத்தின் வெளியீட்டிற்கு முந்தைய நிகழ்வு சமீபத்தில் ஐதராபாத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் நாயகன் விஷ்வன் சென், நாயகிகள் நேகா ஷெட்டி, அஞ்சலி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலகிருஷ்ணா கலந்து கொண்டார். மேடையில் அவர் பேசிய ஒன்றை நடிகை அஞ்சலி சரியாக கவனிக்கவில்லை. அதனால், அவர் ஆத்திரத்தில் அஞ்சலியை லேசாகத் தள்ளிவிட்டார். இருந்தாலும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் சிரித்தபடியே இருந்தார் அஞ்சலி.
அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பலரும் பாலகிருஷ்ணாவின் செயலுக்குக் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த சர்ச்சையை பெரிதுபடுத்த விரும்பாத அஞ்சலி அவரது எக்ஸ் தளத்தில் சமாளிப்பு பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
“கேங்ஸ் ஆப் கோதாவரி' படத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்த பாலகிருஷ்ணாவிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாலகிருஷ்ணா சாரும் நானும் ஒருவரையொருவர் எப்போதும் பரஸ்பர மரியாதையுடன் இருந்து வருகிறோம் என்பதையும், நீண்ட காலமாக நட்பாக இருக்கிறோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். மீண்டும் அவருடன் மேடையைப் பகிர்ந்து கொண்டது சிறப்பானது,” என்று குறிப்பிட்டுள்ளார்.
இருந்தாலும் அவரது பதிவின் கமெண்ட் பக்கத்தை லாக் செய்துள்ளார்.