தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா | எக்ஸ் தளம் நெகட்டிவிட்டி நிறைந்தது : ரவி தேஜா கருத்து |
சமுத்திரக்கனி இயக்கத்தில் வெங்கட் பிரபு ஹீரோவாக நடித்த உன்னை சரணடைந்தேன் என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் மீரா வாசுதேவன். அதையடுத்து ஜெர்ரி, கத்தி கப்பல், ஆட்டநாயகன், அடங்க மறு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள மீரா வாசுதேவன் மலையாளத்திலும் தொடர்ந்து நடித்து வருகிறார். மேலும், கடந்த 2005ம் ஆண்டு விஷால் அகர்வால் என்பவரை திருமணம் செய்து கொண்ட மீரா வாசுதேவன், 2010ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.
அதன் பிறகு 2012ம் ஆண்டு நடிகர் ஜான் குகைன் என்பவரை திருமணம் செய்து கொண்டு 2016ல் அவரையும் விவாகரத்து செய்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் தற்போது மூன்றாவதாக விபின் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார் மீரா வாசுதேவன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கடந்த மே 21ம் தேதி தங்களது திருமணம் நடைபெற்றதாகவும், குடும்பத்தார், நண்பர்கள் மட்டுமே இதில் கலந்து கொண்டதாகவும் தெரிவித்திருக்கிறார். மேலும் எனது கணவர் விபின் பாலக்காட்டைச் சேர்ந்தவர். திரைப்பட ஒளிப்பதிவாளர். கடந்த 2019ம் ஆண்டு முதல் அவருடன் இணைந்து பணியாற்றி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டதன் காரணமாக தற்போது திருமணம் செய்துள்ளோம். அனைவரும் எங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று அவர் அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார்.