பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது |

தமிழில் 'ஜெமினி' படத்தில் அறிமுகமாகி முன்னணி கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கிரண். தெலுங்கு, ஹிந்தி படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கிறார். குறிப்பாக அவரது படு கவர்ச்சி படங்களை இன்ஸ்ட்ராகிராமில் பார்க்க தனியாக கட்டணம் வசூலித்தும் வருகிறார்.
இந்த நிலையில் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் பங்கேற்க விரும்பினார். அங்கு ரெட் கார்பெட்டில் கவர்ச்சியாக நடந்து சென்று உலகின் கவனத்தை திருப்ப நினைத்தார். ஆனால் அவரது ஆசையில விசா ஏஜெண்ட் மண்ணை போட்டுவிட்டான்.
இதுகுறித்து கிரண் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருப்பதாவது: நான் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு செல்ல ஐதராபாத்தில் உள்ள ஒரு மையத்தில் ஏப்ரல் 19ம்தேதி விசாவுக்கு மனு செய்தேன். அவர்களிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. பாஸ்போர்ட்டையும் கூரியரில் திருப்பி அனுப்பி வைக்கவில்லை. பாஸ்போர்ட் எங்கு இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை என்று ஊழியர்கள் சொல்கிறார்கள். ஒரு மாதமாகியும் எனக்கு விசா கிடைக்கவில்லை.
நான் கடந்த 13ம்தேதி கிளம்பி இருக்க வேண்டும். ஏற்கனவே விமான டிக்கெட், ஓட்டல் அறையை புக் செய்துவிட்டேன். ஒரு மாதமாகியும் எனக்கு பாஸ்போர்ட், விசா கிடைக்கவில்லை. விசா கிடைக்காததால் எனக்கு 15 லட்சம் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன்'' என்று வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார்