இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! |
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை பாயல் ராஜ்புத். 'ஆர்டிஎக்ஸ் 100', இஷா, சித்ரா, ஆர்டிஎக்ஸ் லவ், வெங்கி மாமா, டிஸ்கோ ராஜா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் 'இருவர் உள்ளம்' என்ற படத்தில் நடித்தார். கடைசியாக 'மங்களாவரம்' என்ற படத்தில் நடித்தார்.
இதற்கிடையில் அவர் 'ரக்ஷனா' என்ற தெலுங்கு படத்தில் நடித்தார். நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இந்த படம் பல பிரச்சினைகளுக்கு பிறகு வருகிற ஜூன் 7ம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. துப்பறியும் திகில் கதையான இந்தப் படத்தில் பாயல் ராஜ்புத் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ரோஷன், மனாஸ், ராஜீப் கனகலா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரன்தீப் தாகூர் என்பவர் தயாரித்து இயக்கி உள்ளார்.
தற்போது இந்த படத்தின் புரமோசன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இவற்றில் பாயல் ராஜ்புத் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் தயாரிப்பாளர் குறித்து பாயல் ராஜ்புத் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார். அதில் ”ரக்ஷனா படத்திற்கு எனக்கு பேசியபடி சம்பளம் தரவில்லை. சம்பள பாக்கி வைத்திருக்கிறார்கள். அதை கேட்டால் தயாரிப்பாளர் உன்னை தெலுங்கு சினிமாவில் இருந்து விரட்டி விடுவேன் என்று மிரட்டுகிறார். எனது சொத்து விபரங்களை கேட்கிறார். புரமோசனுக்கு என்னை அழைத்தார், சம்பள பாக்கியை செட்டில் செய்தால்தான் வருவேன் என்று கூறினேன். ஆனால் அவர் நேரடியாகவும், ஆட்கள் மூலமாகவும் என்னை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்” என்ற பாயல் கூறியுள்ளார்.
இந்த படம் பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. அப்போது குறைந்த சம்பளத்தில் நடித்த பாயலுக்கு அப்போதுள்ள சம்பளம் பேசப்பட்டு அது கொடுக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது அவர் சம்பளம் பல கோடியாக உயர்ந்துள்ளது. அதன் அடிப்படையில் அவர் சம்பள பாக்கி கேட்பதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது.