மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
2024ம் ஆண்டின் ஐந்தாம் மாதமும் இன்னும் பத்து நாட்களில் முடிய உள்ளது. கடந்து போன இத்தனை வாரங்களில் 90க்கும் மேற்பட்ட படங்கள் வெளிவந்துள்ளன. இவற்றில் 'அரண்மனை 4' படம் மட்டுமே குறிப்பிடத்தக்க லாபத்தைக் கொடுத்துள்ளதாக கோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாப் நடிகர்களின் படங்கள் வராத காரணத்தால்தான் தமிழ் சினிமா இந்த வருடம் இப்படி தள்ளாடிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். அதை இனி வரும் மாதங்கள் சரி செய்துவிடும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. வர உள்ள மாதங்களில் மாதத்திற்கு ஒரு முக்கிய படமாவது வெளிவந்து விடும் என்பது உறுதி ஆகியுள்ளது.
ஜுன் மாதத்தில் ஜுன் 13ம் தேதி தனுஷ் நடித்துள்ள 'ராயன்' படமும், ஜுலை மாதத்தில் ஜுலை 12ம் தேதி கமல்ஹாசன் நடித்துள்ள 'இந்தியன் 2' படமும் வெளியாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்கு மட்டும் இன்னும் எந்த ஒரு பெரிய படத்தின் அறிவிப்பும் வரவில்லை.
செப்டம்பர் மாதத்தில் செப்டம்பர் 5ம் தேதி விஜய் நடிக்கும் 'தி கோட்' படம் வெளியாக உள்ளது. அக்டோபர் மாதத்திற்கு ரஜினிகாந்த் நடித்துள்ள 'வேட்டையன்' படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களுக்கான படங்களின் அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.
அது மட்டுமல்லாமல், விக்ரம் நடிக்கும் 'தங்கலான்', சூர்யா நடிக்கும் 'கங்குவா', சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்', கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியாரே', விஜய் சேதுபதி நடிக்கும் 'மஹாராஜா, ஏஸ்' உள்ளிட்ட படங்களின் அறிவிப்பும் வரும் வாரங்களில் வெளியாகலாம். அதனால், 2024ம் ஆண்டின் இரண்டாம் பாதி தமிழ் சினிமாவிற்கு இனிமையான காலமாக அமைய வாய்ப்புகள் அதிகம்.