சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பவித்ரா ஜெயராம் என்ற டிவி நடிகை சமீபத்தில் நடைபெற்ற விபத்தில் ஒன்றில் அகால மரணமடைந்தார். அவருடன் கடந்த சில வருடங்களாக லிவிங் டுகெதர் ஆக வாழ்ந்த நடிகர் சந்திரகாந்த் என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தெலுங்குத் திரையுலகத்தையும், டிவி உலகத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பவித்ரா விபத்தில் இறந்தபோது அதே காரில் சந்திரகாந்தும் இருந்துள்ளார். ஆனால், அவர் விபத்திலிருந்து தப்பித்துவிட்டார். இதனால், சந்திரகாந்த் மனமுடைந்து காணப்பட்டதாகத் தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் கூட மிகவும் கவலையுடன் சில பதிவுகளை பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் அவரது வீட்டில் உள்ள பேனில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இருவரும் ஏற்கெனவே வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றுள்ளனர். டிவி தொடரில் ஒன்றாக நடித்த போது காதல் மலர்ந்து லிவிங் டுகெதர் ஆக வாழ்ந்துள்ளனர்.