அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

வேல்ஸ் பிலிம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள படம் 'பி.டி சார்'. ஹிப்ஹாப் தமிழா ஆதி நாயகனாக நடிக்க, காஷ்மிரா பர்தேசி, அனிகா, பாக்யராஜ், பிரபு, தியாகராஜன், பாண்டியராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்த்திக் வேணுகோபாலன் திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்துள்ளார். வருகிற 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் அறிமுக விழா நடந்தது. இதில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசியதாவது : வேல்ஸ் பிலிம்ஸில் ஒரு நல்ல படம் எடுத்த திருப்தி இந்தப்படம் மூலம் கிடைத்துள்ளது. இயக்குநரையும், ஆதியையும் படம் பார்த்தவுடன் கூப்பிட்டுப் பாராட்டினேன். இடைவேளை வரை ஜாலியாக இருக்கும், இறுதியில் மிக முக்கியமான விசயத்தைத் தைரியமாகச் செய்துள்ளார்கள்.
ஆதிதான் இந்தப்படத்தின் கதையைக் கொண்டு வந்தார். கார்த்திக் இப்படி ஒரு படம் செய்வார் என நினைக்கவில்லை, அவரை அடுத்த படத்திற்கும் புக் செய்து விட்டேன், அடுத்த படமும் எங்களுக்குத்தான் செய்கிறார். ஆதி இசையமைப்பாளராக 'அரண்மனை 4'ல் கலக்கியிருக்கிறார். அதேபோல் பிடி சாரிலும் கலக்கியிருப்பார். உங்கள் அனைவருக்கும் கண்டிப்பாக இப்படம் பிடிக்கும். என்றார்.
பின்னர் பத்திரிகையாளர்கள் சிம்புவுக்கு நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்தது பற்றி கேட்டபோது “சிம்பு 'தக் லைப்' படத்தில் நடிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர் எங்களுடைய படத்தை (கொரோனா குமார்) முடித்து கொடுக்க வேண்டும் என்றுதான் சொல்கிறோம். அவரும் விரைவில் படம் நடித்துக் கொடுப்பதாக உறுதி அளித்துள்ளார். அண்ணன் - தம்பிக்குள் நடக்கும் பிரச்னைதான் இது. சீக்கிரம் சுமுகமாக முடிந்து விடும்” என்றார்.
உங்கள் தயாரிப்பில் ரஜினி நடிக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளித்த ஐசரி கணேஷ் "நான் ரஜினியை சந்தித்தது உண்மைதான். அவரும் எங்கள் தயாரிப்பில் படம் நடித்துத் தருவதாக சொல்லி இருக்கிறார். சீக்கிரம் நல்ல செய்தி வரும்" என்றார்.