'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
பாலிவுட்டில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் 'ராமாயணம்'. இந்த படம் 3 பாகங்களாக வெளிவருகிறது. இதில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய்பல்லவி சீதையாகவும் நடிக்கிறார்கள். நிதிஷ் திவாரி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள அரண்மணை ஒன்றில் நடந்தது. இது டெஸ்ட் ஷூட் என்றும் கூறப்படுகிறது. இதில் ராமராக ரன்பீர் கபூரும், சீதையாக சாய்பல்லவியும் நடித்தார்கள்.
இந்த படப்பிடிப்பு படங்கள் நேற்று சமூக வலைத்தளங்களில் பரவி வைரல் ஆனது. படப்பிடிப்பில் செல்போன்களை கொண்டு வரவும், பயன்படுத்தவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தும் படங்கள் கசிந்தது படப்பிடிப்பு குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தை பார்த்த நெட்டிசன்கள், சீதையாக சாய்பல்லவி பொருத்தமாக இருக்கிறார். ஆனால் ராமர் கேரக்டருக்கு ரன்பீர் கபூர் பொருத்தமாக இல்லை. அவர் முகத்தில் ராஜக்கலை இல்லை. கடைசியாக 'அனிமல்' படத்தில் ஆபாச காட்சிகளில் நடித்து விட்டு அவர் ராமராக நடிப்பதை ஏற்க முடியாது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.