சிரிப்பிற்கு தனி அடையாளம் தந்த நடிகர் மதன் பாப் காலமானார் | அதிரடி மாஸ் காட்டும் ரஜினியின் ‛கூலி' பட டிரைலர் | சூர்யாவின் 46வது படத்தில் இணைந்த பவானிஸ்ரீ | முதல் தேசிய விருது : அட்லிக்கு நன்றி தெரிவித்த ஷாருக்கான் | கிளைமேக்ஸ் மாற்றப்பட்டு ரீ-ரிலீஸ் ஆன தனுஷ் படம் : இயக்குனர் கோபம் | துள்ளுவதோ இளமை அபினய்க்கு என்னாச்சு : லிவர் ஆபரேசனுக்காக காத்திருக்கிறார்? | கூலிக்கு ஏ சான்றிதழ், 2:48 நிமிடம் நீளம் : இதெல்லாம் பட வசூலை பாதிக்குமா? | கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் |
'தடம்' படத்தில் இரண்ட வேடங்களில் நடித்திருந்த அருண் விஜய் தற்போது நடித்து வரும் 'ரெட்ட தல' படத்திலும் இரண்டு வேடத்தில் நடிக்கிறார். இரண்டு வேடத்திற்கும் சித்தி இட்னானி, தன்யா ஜோடியாக நடிக்கிறார்கள். ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய், பாலாஜி முருகதாஸ், யோக் ஜேபி, வின்சென்ட் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.
இந்தப் படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் அருண் விஜய் பேசும்போது “தடம் படத்துக்குப் பிறகு நான் இதில் 2 வேடங்களில் நடிக்கிறேன். இந்தபடத்தோட கதை எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது. நான் எப்பவும் ஒரு பார்வையாளனாக உட்கார்ந்துதான் கதை கேட்பேன்.
இந்தப் படத்துக்கான தலைப்பைப் பற்றிப் பேசும்போது 'ரெட்ட தல'ங்கிற டைட்டில் சொன்னாங்க. இந்தக் கதைக்கு அந்த டைட்டில்தான் சரியாக இருக்கும்னு முடிவு பண்ணிட்டோம். 'தல'ங்கிறது தமிழ்நாட்டுல ரொம்பவே பவர்புல்லான டைட்டில். இந்தத் திரைப்படத்தோட கதாபாத்திரத்துக்கு அப்படி ஒரு வலிமையான தலைப்பு தேவைப்பட்டுச்சு. இந்தத் திரைப்படத்தோட தலைப்பை 10 வருஷமாக இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வச்சிருந்தார்ன்னு சொன்னாங்க. எங்களுக்காக இந்தத் தலைப்பைக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்றார்.